செவ்வாய், ஆகஸ்ட் 02, 2005

திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் தான் நினைவில் வருவார்கள். புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவண்ணாமலை என்ற பேரில் ஒரு வைணவத் திருத்தலமும் உண்டு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.

ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.

ஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது! அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட)! பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.

மனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம்! அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசுமையான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.

29 கருத்துகள்:

Agnibarathi சொன்னது…

சுபாஷினி, மற்ற எதையும் விட, உங்கள் தமிழ் நடை மிகவும் அழகாக உள்ளது! இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மார்கழி மாத வைகரைத் தென்றல் போல் மிதந்து சென்றது! இதற்கு மேல் பெருமாள் பற்றி எழுதியது இன்னும் அணி செய்தது! வாழ்த்துக்கள்!!

பெயரில்லா சொன்னது…

உங்கள் தமிழ் நடை நன்றாக உள்ளது.
பீட்டர் விடும் பெண்களால் தமிழுக்கு ஆபத்து என்ற என் எண்ணத்தை மாற்றிவிட்டீர்கள்.ப்ளிஸ் டு நாட் ஸ்டாப் ரைடிங்.

TJ சொன்னது…

அருமை!! நாங்கள் ஆண்டு தோறும் குற்றாலம் சென்று திரும்புகையில் பெருமாளை தரிசனம் செய்ய எண்ணுவோம். ஆனால் தட்டிக்கொண்டே செல்கிறது. என் அப்பா அம்மா மட்டும் ஒரு முறை, திருவில்லிப்புதூரில் இருந்து நடந்தே சென்று தரிசித்து வந்து, கோவிலின் அழகை வர்ணித்தார்கள். அதிலிருந்தே, அங்கு செல்ல வேண்டும் என்று எனக்கிருந்த ஆவலை, இக்கட்டுரை பன்மட்ங்காக்கியுள்ளது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

உனது கட்டுரை மிகவும் அருமை.இந்த வைணவத் திருத்தலத்தைப் பற்றி இப்ப தான் முதன் முதலா கெள்விப் படறேன்.
இதை படிக்கையில் மதுரையில் உள்ள கூடலழகர் பெருமாள் கொவிலும், பிரசாதமும் :) தான் நினைவுக்கு வருகிறது. சூபர்ர்ர்ர்ர் .. கலக்க்க்க்கு ..

வாசுதேவன்

Ganesh சொன்னது…

very nice blog
as you told you have updated the tamil one, keep updating this :)

Gnana Kirukan சொன்னது…

This is a great blog - do check out my blog also :)

http://naan-yaar.blogspot.com

Gnana Kirukan சொன்னது…

Let you know - I have blogrolled you! Nice posts

Ganesh Venkittu சொன்னது…

subha,

I got the feeling of reading "venkatam mudhal kumari varai" when I read this...

பெயரில்லா சொன்னது…

subha super...kalakitta...enna project la ore busy a madam...next time nan entha kovil sure a poren...
kau

Chakra சொன்னது…

> இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.

- this is one statement that needs lot of clarification.

You know Uppiliappan Kovil near Kumbakonam? Uppiliappan is considered the elder bro of Tirupathi perumal and they tell that if you visit U.Kovil, its as good as visiting Tirupathi.

Annan Perumal Kovil, near Sirkazhi is one of the 108 divyadesams. Its our family deity. Perumal there is considered "annan" of Tirupathi perumal and the same stuff is being told.

Anyway, it doesn't matter.

Coming to your blog post, its very well written. Well done!!

பெயரில்லா சொன்னது…

Indha Tamil blon Migavum nandraga irundhadhu.

Vainava thiruthalangalil kedaikum Prasadhathai pola suvayana prasadhathai naa engum undadhillai.

Madurayil ulla Thirumogur Kovilil kedaikum Puliyodhariku naan adimai.
Vidiyal kalai oru 6 -6.30 mani tharuvayil thiromugurukku sendru perumal/chakarathalvaarai dharisithu vittu, andha thamarai kolathiru pakkathil puliyodharai sapidum nerathai minja indha vaazhnaalil veru ondrum illai.

-vv

Raju சொன்னது…

மதுரையில் பனியா?

sb சொன்னது…

Subha,
nalla blog again. indha dhadava mAru pattu Sivanai pathi dhan ezhudha porayonu nenachen. hmmmm, konjam horizntal side vangama, vertical orientation overa irukke ;-)
SB

(Mis)Chief Editor சொன்னது…

ரொம்பவும் அருமையான விஷயம். எளிய நடையில் புதுசாய் உணர வைத்ததற்கு நன்றி.

கடவுளைப் பற்றி எழுதினாலே மணக்கத்தான் செய்கிறது இல்லை?!

பெயரில்லா சொன்னது…

sokka kethu un post... anna nammuku ejukaeshun kammi..athunala than unnoda range postellam avalo padikirathu illa ma.. neraiya fan pudichitama nee.. ennamo po..

பெயரில்லா சொன்னது…

Subha,

nice post and btw, there is a temple near trichy, called Gunaseelam and the idheegam is the perumal is big brother of Lord Venki in Triupathi and anga poi perumaala paathaaley, thipathi poi paartha palan...thirupathi varennu vendindavanga, poga mudiyalanna, indha kovilukku povaangannu kelvippattirukken...

The Doodler சொன்னது…

Agnibarathi, thanks.
Mythili,
I think that strange attachment to a deity comes from living in a templetown for some amount of time..:)
Tamil_virumbix,
ella pengalum 'peter' vidubavargal alla...:) Thanks for stopping by.

The Doodler சொன்னது…

tj,
glad to see someone else who wants to visit that temple.
Vasu,
Madurai sendraal kandipaaga indha kovil sendru varavum.
Ganesh,
I try to keep updating both my blogs but of late I've been caught up with one thing or the other. Don't have much time to collect my thoughts, sit and write. But I will try..:)

The Doodler சொன்னது…

Arjuna_speaks,
will check out yours pretty soon. People, I am sorry if I keep saying this and don't do it. I have been meaning to add links to all your blogs but as I said, laziness and to some extent, other things have taken priority..:)

The Doodler சொன்னது…

Ganesh sir,
Haven't read Venkatam mudal Kumari Varai. If you have a link online, please do send it to me.
Kaushik,
please do.
VV,
I am with you on this one! Vaishnavaite temples generally have really rich and consequently more tasty food!

The Doodler சொன்னது…

Chakra,
I think in those days when transportation was by foot, not everyone could afford to go to Kasi or Tirupati. I believe the other temples where Perumal is the "Big Brother" of the Tirupati perumal were given that title so people could feel satisfied by visiting these places. After all, it is a trick of the mind. The same God is prevalent anywhere and everywhere..:)

The Doodler சொன்னது…

gp,
madhuraiyilum pani vizhum-margazhi maadathil!

The Doodler சொன்னது…

Anonymous and Lila,
thanks. Will check out your blogs.

Sujan,
seekkirame horizontal pakkam varen..:) Next post on Thayumanaswamy..tripthiya? :)

Anon,
sokka keedhu nu sonnadhukku nandri..:) Neengo yaarungo?

The Doodler சொன்னது…

Palli Kondaan,
sila nerangalil naan manththil ninaippadhai sariyaaga ezuththil kondu vara mudivadhillai..oru athrupti irundhu konde dhaan irukkiradhu. Parpom, ezhuda ezhuda naan edho therugirena endru!

Sundaresan,
exactly right. There are a lot of "big brothers" of the Tirupati Lord..:)

பெயரில்லா சொன்னது…

hello subha,
Thiruvannamalai endru thalaippu koduthuvittu Srivilliputtur aruge ulla thiurvannamalai patri solli irukkireerkal. Ungalukku aanmeegathil alavukkathigamana edupadu iruppathaga therikirathu.
Good. keep it up.
Siva perumaaninin pancha pootha sthalangalil Thiruvannamalai "Agni"kku uriyathu.
Ungalukku theriyumaa ?
"Chidhambarathai paarthal mukthi
Thiruvarurai tharisithal mukthi
Thiruvannamalaiai ninaithale mukthi"
So, antha eshwaran ungalukku mukthi valangattum.
Makkal vellamaga koodum Thiruvannamalai pournami girivalam patri ungalukku theriyuma?
Ramana maharishi patri theriyuma?
Adutha postil theruvikkiren Adhuvarai ungalidamirunthu vidai peruvathu
Madurai Moorthy

பெயரில்லா சொன்னது…

Thirunannamalai temple is just 3 km from the town. Regular bus service is available from the srivilliputhur bus station.

பெயரில்லா சொன்னது…

Nice post. Thiruvannamalai perumal is our kulatheivam. I used to feel bad that the temple is not very well-known among lot of people. I appreciate your effort in making it popular.

Gurusamy சொன்னது…

I really loved your writings. Hats off to your Work !!

Annanperumal Adimai சொன்னது…

Annanperumal Koil Karkandu Sakaripongal is very famous. Like Sri Annanperumal... Have you ever tasted it? so tasty.. pls. visit atleast once. You will realize.