செவ்வாய், மார்ச் 06, 2007

இன்று போய் நாளை வா...

உடையாரை ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். எழுத்துப் பிழைகளும், வர்ணனைப் பிழைகளும், பெயர் பிழைகளும் இருந்தாலும், கதை மிக அழகாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் மிகையான நடை இலேசாக கசந்தது..இராஜராஜனும் இன்னும் பல மன்னர்களும் சேர்ந்து வளர்த்து கொடுத்த தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் இன்று நாம் அழித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற ஒரு சிறு கவலையும் வந்து கவ்விக் கொள்கிறது!

இந்த வலைப்பூவில் அடிக்கடி பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். எதைப் பற்றி எழுதலாம், என்னென்ன எழுதலாம் என்று அன்பர்கள் idea கொடுத்தால் நன்றாக இருக்கும்! :) ஆகையால், வாசகர்களே, இன்று போய் நாளை வந்து இந்த வலைப்பதிவை அடிக்கடி பார்க்கவும்...