ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2005

மலைக்கோட்டை (தாயும் ஆனவர்)

திருச்சி மலைக்கோட்டையை சுற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'திரிசரன்' என்ற அசுரன் இறைவனை இங்கு வழிபட்டதால் 'திரிசரபுரம்' என்று பெயர்க்காரணம் கூறுவார்கள். கைலாய மலையிலிருந்து துகளாகி மூன்று பாகங்கள் பறந்து வந்ததாகவும், அதில் ஒன்று திருச்சி மலைக்கோட்டை என்றும் கதை இருக்கிறது. மூன்று குன்றுகளில் பிள்ளையார், தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலியம்மன் அருள்புரிகிறார்கள்.

ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.

தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.

உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.

இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.

18 கருத்துகள்:

Arjuna சொன்னது…

Arumai, Arumai, Migavum Arumai Subha! You should write regularly! It so good! :)

பெயரில்லா சொன்னது…

panpaattirkum aanmeegatthirkum saerthu indha valaippadhivil thirampada ezhudhi varum ungalukku andha ARANGANIN anugraham eppozhuthum irukka vendi en Arangatthin amudanai vendi kettu kolgiren.

dayai koorndhu adiyenudaiya dwaarakaikku (www.dwaarakavaasin.blogspot.com) 26am thaedi Krishna Jayanthi siraapu katturaiyai padikka varavum

SARVAM SRIKRISHNAARPANAMASTHU!

Chakra சொன்னது…

very well written again..

Subha... there is another story linking Uchchi Pillayar - Lord Ranganathar - Vibishana, which i am sure you wd hav heard. That story wd be there in the naalu kaal mandapam on the way from Thayumanavar sannidhi to the snack shops.

TJ சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
TJ சொன்னது…

திருச்சிராப்பள்ளியை மீண்டும் கண் முன் நிறுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

அந்த அசுரன் பெயர் ‘திரிசிரன்’. அவனுக்கு மூன்று தலைகள். அந்த ஷிவ பக்தன் ஆண்ட நாடு திரிசிரபுரி (அ) திரிசிரபுரம். மஹாலக்ஷ்மி சன்னிதிக்கு அருகே இருக்கும் பிரகாரத்தில் திருசிரன் விக்ரஹம் அமைய பெற்றுள்ளது.

பெயரில்லா சொன்னது…

Super sudha.. Kaveri-kku pattu paavadai uduthi adhu nadandhu povadhai kandu rasippadhu pola oru unarchi..

பெயரில்லா சொன்னது…

Subha,

Romba nalla irunthathu .. azhaga ezhithirukka ... keep it up !

-Vasu

பெயரில்லா சொன்னது…

Subha,

good one. Btw, the shape of the rockfort looks like a sitting nandhi...the reason for getting angry with the chola king was that he took the flowers from Nandhavanam for the Queen..

Agnibarathi சொன்னது…

pEsAmal Indiavukku vanthu Doordarshan podhigai TVil ulA varum olikkathir host pannalAum Subha!!

பெயரில்லா சொன்னது…

Subha super post kudos ...u bang..
From your post I figured that u r from srirangam...My pattis house is in srirangam too..Kizha chitravidhi near the Ther...R u from one of the vidhis...between did u study at RECT...U r face is familiar...I have seen u in srirangam...I m sure..I guess in the chakrathalrvar sannidhi..I m sure subha...between I am in Ohio state colombus..into Electrical Engineering...Nice meeting u through u r blog...My patti used to say Srirangam ponnu na summava nu....I always tell her..(me from Chennai) summa sollathey nu....
But u proved it...Read all u r posts..Good Work
Kavya

Arjuna சொன்னது…

Subha - how do u write tamil in ur blogs? I tried to get the ekalappai you mentioned in onr of ur previous posts..but its not available..let me know pl..

philharolds64257441 சொன்னது…

I read your blog, and i thought it was rather cool. check out My Blog
Please Click Here to view it

Have a Great Day

யாத்ரீகன் சொன்னது…

சுபா.. ஆன்மீக கட்டுரை படிச்ச மாதிரி இருக்கு... :-)

யாத்ரீகன் சொன்னது…

Hi arjuna_speaks,

visit http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

and save that page in your PC and start typing in tamil...

Agnibarathi சொன்னது…

aduththa paguthi eppOthu?

Arjuna சொன்னது…

செந்தில் - அருமை, அருமை - மிக்க நன்றி :)

Rags சொன்னது…

கட்டுரை ப்ரமாதம். திருசி பொய் வன்தா மாதிரி இருக்கு

Thanks Senthil...I apolize if anything wrong in the sentence

யாத்ரீகன் சொன்னது…

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்..
என்பது தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி..
கணினிச்செந்தமிழும் கைப்பழக்கம் என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.. :-)

தவறில்லை rags :-)