வியாழன், ஜூன் 09, 2005

வினயம்...

நான் ஐந்தாவது படிக்கும் போது, எதோ ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். அப்போது எனக்கு தலை கால் புரியவில்லை. என்னமோ உலகத்திலேயே நான் தான் பெரிய orator-ன்ற நினைப்பில் ஒரு ரெண்டு நாள் சுத்தினேன். அது அறியா வயசு..:) ரெண்டு நாளைக்கப்பறம், ஒரு inter-school போட்டிக்கு போனேன். அன்னிக்கு தான் தெரிஞ்சுது நான் ஒண்ணுமே இல்லைனு. மதுரைக்கு போன புதுசுல, சென்னை-ல இருந்த எனக்கு அங்க எல்லாருமே வித்தியாசமா தெரிஞ்சாங்க. கொஞ்சம் கூட fashion sense இல்லை-னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். பெரிய city-girl, எனக்கு தான் எல்லாம் தெரியும்-னு நினைச்சேன். ஆண்டவன் வெச்சான் ஒரு குட்டு! கொஞ்ச நாளில் தெரிஞ்சது, அங்க இருக்கறவங்க எவ்வளவு talented-னு! ஒரு மிக சாதாரணமான கிராமத்து பெண், கணிதத்தில் விட்டு கலக்கி எடுத்து விட்டாள். எனக்கு, இன்னிக்கு கூட, அவள் வேகத்துக்கு accurate-ஆக கணக்கு போட வராது. Calculus-ல் பலர் திணறிக் கொண்டிருக்க, அவள் மனக்கணக்காலேயே பல பாடங்களை போட்டுவிடுவாள்! அன்று வாயடைத்தவள் தான் நான். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது என்பதில், இளமையிலேயே நான் கற்று கொண்ட பாடம்.

Canada-வில் 11th படித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு சீனர்கள் ஜாஸ்தி. அப்போது Hong Kong சைனாவிடம் ஒப்படைக்க போகும் நேரம். அதனால் பலர் அங்கிருந்து immigrate ஆகி கனடா வந்தனர். சீனர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவே பல மணி நேரம் ஆகும். எனக்கு மனதுக்குள் ஒரு ஏளனம். ஆங்கிலமே பேச தெரியாமல், இவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று நினைத்தேன். நான் செய்த மிக பெரிய mistakes of judgement-ல் அதுவும் ஒன்று.

English-to-Chinese dictionary எடுத்துக் கொண்டு வருவார்கள் சீன மாணவர்கள். வகுப்பில், ஆசிரியர் பேசுவது அவர்களுக்கு மிக வேகமாக இருக்கும். புரியாது. அதனால், அதை காசெட்டில் record செய்து கொள்வார்கள். வீட்டில் சென்று, அதைக் கேட்டு, English-to-Chinese dictionary கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை translate செய்து, புரிந்து கொண்டு, பின்பு வீட்டு பாடம் செய்வார்கள்! அசந்து போனேன் நான். Hats off to their perseverance and patience.

மிக கூர்மையான மூளை கொண்டவர்கள். என் physics வகுப்பில், ஆங்கிலமே தெரியாத ஒரு சீனன் இருந்தான். அவன் பெயர் Lemus Chang. மிக அமைதியானவன். ஆங்கிலம் தெரியாததால் பேச மாட்டான் என நினைக்கிறேன். மிக கூச்ச சுபாவி. ஆனால் physics-ல் அவனிடம் பிச்சை வாங்க வேண்டும். எத்தனை கடினமான கணக்காக இருந்தாலும், எளிதில் elegant-ஆக முடித்து விடுவான். எங்கள் ஆசிரியரே அவனிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டார்! பின்னர் அவன் Governor General's Award for Outstanding Student வாங்கினான். University of British Columbia-வில் அவனுக்கு மிக உயர்ந்த நிதி உதவியுடன் அட்மிஷன் கிடைத்தது. ஆனாலும் மிக அடக்கமானவன். எனக்கு நிறைய நாட்கள் உதவியிருக்கிறான். மிக பொறுமையாக, ஆங்கிலம் தெரியாவிட்டாலும், எனக்கு பாடங்களை புரிய வைப்பான். மிக அருமையாக வயோலின் வாசிப்பான்! எங்கள் valediction-ல் அவனுக்கு நாங்கள் ஆடிட்டோரியத்தில் standing ovation குடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி பலர், என்னை பல விதங்களில் அசத்தியிருக்கிறார்கள், often from least expected quarters. அப்போது கற்றுக் கொண்ட பாடம்: Never underestimate anyone. பல திறமைசாலிகளை சந்தித்திருக்கிறேன். சிலர் கலைகளில் சிறந்தவர்கள். சிலர் படிப்பில் சிறந்தவர்கள். சிலர் போன்ற தங்கமான குணம் பார்க்கவே முடியாது! ஆனால் என்னை அவர்களிடம் கவர்ந்தது, திறமை அல்ல. அவர்களுடைய அடக்கமும், வினயமும் தான். "நான் தான் பெரியவன்", "என்னை விட யாருமே இதை நன்றாக செய்ய முடியாது" என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் நிறைய. "இவனிடம் போய் இத்தனை talent-ஆ" என்று சொல்வது என்னை பொறுத்த வரையில் ஒரு பெரிய அவமதிப்பு. ஒரு மனிதனிடம் இருக்க கூடாத ஒன்று இருந்துவிட்டது போல் கூறுகின்ற statement அது.

10 கருத்துகள்:

Maayaa சொன்னது…

sariyaa sonna maa..naan kooda mudhal mudhala unnna paathu (un muzhiya paathu) romba thimirpidichavannu nenchen:)

sariyaathan sonna valluvar,
"adakkam amararul uyyikum, adangaamai aarirul uyythu vidum"

Narayanan Venkitu சொன்னது…

Subha,
First time here. How did you manage to type so much in tamil.

You are great.!! I came here thru Kannadasan's blog..He has linked your poem.

You are great....keep writing.!

பெயரில்லா சொன்னது…

Kuttu NaLla balama thn VechirukKan! Appo Pithingina Muzhiya Ennum Marala ? :) ..

-Vasu

Ganesh Venkittu சொன்னது…

Subha, My name is Ganesh Venkittu. From what you have written, I believe you are

1) a very serious writer in tamil, carefully using words and using the correct spelling
2) have very deep "Vidwat" in literary works some of which you have quoted.
3) have a great passion for the lord of Srirangam Sri Ranganathar

I share the same virtues and traits so I am enthralled to read the works of someone who has the same..I hope my assessment of you was not wrong...

I found your blog very interesting and informative and I will include yours in mine. Do blog...

thanks
ganesh
www.gvenkittu.blogspot.com

Ganesh Venkittu சொன்னது…

Subha, as part of my research in old tamil words as well as for my poetry in my blog, I am reading "paandavar bhoomi" by vali...in that I came across the phrase "Kezhalaai vandha Neezhalae!"

Kezhal means "pig" and vali is describing his Varaka avatar....do you know the meaning of "Neezhal"...

this is the same Neezhal that comes in "maasil veenaiyum malai mathiyamum" as well which you quoted...so I thought I would ask...

ganesh

The Doodler சொன்னது…

Ganesh,
"neezhal" as far as I know carries the same meaning as "nizhal" or shadow. Perhaps, in the context of this poem, it can be taken as "shelter under the lord's feet"..
I cannot boast of any "vidwat" in Tamizh...:) And this is my first shot at writing in Tamizh..I enjoy the language a lot and would like to know more though!
Thanks for stopping by. Will blogroll you too..:))

வெங்கி / Venki சொன்னது…

கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் இருப்பது மிகப் பெரிய பேரு. தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் வளர்ந்ததாய் நான் கேள்விப்பட்டதேயில்லை. வாழ்த்துக்கள். மிக அழகாக எழுதுகிறீர்கள். ஆவலோடு எதிர்ப்பார்கிறேன். அவசியம் எழுதுங்கள்.

Moorthi சொன்னது…

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழி. வாழ்க வளர்க!

ஒருமுறை வகுப்பில் கணிதபாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பெருக்கல், வகுத்தல், கூட்டல், உதைத்தல் எல்லாம் முடிந்தபிறகு விடையை எழுத வேண்டும்.

கடைசி விடை 25பை(பை என்பது கணிதத்தில் உள்ள ஒரு குறியீடு. இதனை 22/7 என்று குறிக்கலாம்)

நான் அதனை 25பை என்று அப்படியே விடாமல் 25*22/7 எனப்போட்டு வகுத்து பெருக்கி உதைத்து மண்டை காய்ந்து கடைசியாக சரி சரி நாளைக்குப் பாக்கலாம்னு சமாளிச்சேன். பழைய ஞாபகம் வந்துட்டுது.

sb சொன்னது…

Subha,
excellent!!! I would like to share an interesting observation. Ignorance is the cause for conceit. Best example is racism. "veLLayanin ariyAmai". An intelligent person is one who seeks knowledge from anybody/anything.

plainsay சொன்னது…

Saw your weblog by accident. It is really interesting. I send you my greetings and congratulations.