செவ்வாய், ஜூன் 28, 2005

அகிலாண்டேசுவரி (திருவானைக்காவல்-2)

வெகுவாக, பல சைவ §க்ஷத்ரங்களில், இறைவன் பெயரைச் சொல்லித்தான் கோவிலை அழைப்பார்கள். "நடராஜாவை பார்த்து விட்டு வரேன்", "கபாலீசுவரர் கோவில் போய்ட்டு வரேன்" என்று தான் பெரும்பாலும் கூறுவார்கள். மதுரையில் மட்டும் தான் "மீனாட்சி அம்மன் கோவில் போயிருந்தேன்" என்று கூறுவார்கள். திருவானைக்காவலிலும், ஜம்புகேசுவரருக்கு சமமான மரியாதை அம்பாள் அகிலாண்டேசுவரிக்கும். திருச்சியில் தடுக்கி விழுந்தால் ஒரு அகிலா-வை பார்க்கலாம்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; அப்போது அருகாமையில் இருக்கும் அக்ரஹாரத்து மக்கள் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தால், அம்பாள் உக்ரம் தாங்காமல் அப்படியே பொசுங்கி சாம்பலாக போய்விட்டதாகவும் இன்னமும் கூறுகின்றனர்!

இதை வைத்து, அம்பாள் கருணையில்லாதவளா என்று பலர் கேட்கலாம். கீதையில் அர்ஜூனனுக்கு விச்வரூப தரிசனம் கண்ணன் காண்பித்த போது, அது வரையில் அதை காணத் துடித்துக் கொண்டிருந்த பார்த்தன், அந்த ரூபத்தின் தேஜசும், உக்ரமும் காண சகிக்காமல், மறுபடியும் மனித உருவத்தை கொள்ள வேண்டி கண்ணனை மன்றாடவில்லையா? அதே போல் தான், அகிலாண்டேசுவரியின் உக்ரமும் அசக்தர்களான மனிதர்களை தாக்கியது. என்றுமே உண்மையைக் எதிர்கொள்ள தெம்பு ஜாஸ்தி வேண்டும். ஆதி சங்கரர், அப்பாவ்¢ ஜனங்களை காப்பதற்காக, அவள் உக்ரத்தை தணிக்க இறைவ்¢க்கு தாடகம் செய்து அணிவித்தார். இன்றும், அகிலாண்டேசுவரியின் அழகிய காதுகளில் அதைக் காணலாம். மேலும், அவளை குளிர்விக்க அவளது பெரிய பிள்ளையான வினாயகரை அவள் சந்நிதானத்துக்கு முன்பாக ப்ரதிஷ்டை செய்தார். தன் செல்லப் பிள்ளையை பார்த்துக் கொண்டே அவளும், சிரிப்புடன் பக்தர்களுக்கு, இன்றும் அருள் புரிகிறாள்.

27 கருத்துகள்:

Kay சொன்னது…

Naaanum kelvi pattu iruken artha raaathriyil ammman kovil suthi valam varuval endru, naaan 6 years chrompet'il kovil veetil thaaan irunthen. Kovil veeduna eppadina antha kovil ottiye thaaan antha veedu irunthathu and kovil ubayastharum antha kovil veetula thaan irunthaaanga. avanga usual'aa solluvaanga nightla amman kovil suthi varuvaaangnu, so night 12 manikku apram naaan veetu vittu velila po maaten. Ithu epponaa naan 1st std padikarache.
Kovil veetula irunthathu romba fun'aa irunthathu, athu pakkam pakkama blog'ave podalaam, athu naan neruliye solren.

Agnibarathi சொன்னது…

Had been to Thiruvanaikka recently! ArputhamAna kovil, azhagAna AmbAl. Have you listened to the song 'AkilAndeshwari rakshamAm'? Beautiful one!!

Ganesh Venkittu சொன்னது…

Subha, thanks for coming back from a short sabbatical....

யமுனா கல்யாணியில் அமைந்த தீஷிதர் க்ருதி "ஜம்புபதே மாம் பாஹி" கண் முன்.....

For those of you fans of carnatic music, that song is rendered by Sangeetha Kalanidhi B.Rajam Iyer in a double CD set titled "Swara Bushani".....Swara Bushani came in Doordarshan (good old days) and the CD is a collection of songs by several singers -- DkPattamal (சிந்தயமாம் - பைரவி - காஞ்சிபுரம்), DK Jayaraman (ஆனந்த நடன பிரகாசம் - கேதாரம் - சிதம்பரம்), Semmangudi (ஸ்ரீ காளஹஸ்தித - ஹ¤சேனி -- Kalahasthi), KVNarayanaswamy (அருணாசல நாதம் - சாரங்கா - திருவண்ணாமலை)...

Subha, I have never been to Srivilliputhur.....I am assuming you have (since your wrote that "bhattar" conversation)....hoping you would do one on that temple too when you find time....

பெயரில்லா சொன்னது…

Trichy-la dhadikku vizhundha akila-va paakalam-a? Ennamo solra !

Whenever I read your blogs I feel like watching temple travelogs showed in Doordarshan during early days ..

I remember some travelogs on temples at Puri,Srisailam, Manasarovar, Tanjore and Meenakshi temple ..

A very Good write-up! Kalakku :)

-Vasu

Ganesh Venkittu சொன்னது…

subha, you used this word in your writing...

அசக்தர்களான

this word is new to me....I have not come across it...does this word mean "sakthi illatha"? or does it mean "ordinary"......

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள சுபா அவர்களுக்கு,

'அகிலா' பற்றிய குறிப்புகள் மிக அருமை.

'அசக்தர்கள்' - மிக அருமையான பதம். 'வினாயகர்' என எழுதுவது சரியில்லை. விக்னத்தைத் தருவதும், விக்னத்தை நீக்குவதும் அவரே என்பதால் விநாயகர் என்பதே சரியான பதம்.

தாடகத்தைப் புதுப்பிக்க காஞ்சி மஹா பெரியவர் எடுத்த முயற்சிகளையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

வாழ்க வளமுடன் மற்றும்

என்றும் அன்புடன்,
ரங்கநாதன்

The Doodler சொன்னது…

Agnibarathi,
Yes I have listened to that song. Truly wonderful one!

Ganesh,
thanks for the useful info! I am not a great scholar on temples..:) I just write my own experiences. Will give Srivilliputhur a shot soon. Thanks for the encouragement!

The Doodler சொன்னது…

Vasu,
thanks.

Ganesh, "Asakthargal" means without shakthi. You are right.

Ranganathan,
thanks for the correction. I was not paying attention to the spelling. My mistake.

dinesh சொன்னது…

Nalla irundhudhu description ! Nee sonna maadhiri tiruchi la thadukki vizhundhaa oru akila....enga manni (mama wife) um tiruchi lerndhu vandha akila :)

Chakra சொன்னது…

Subha,

Only today, I happened to read your "Thinnai Arattai" blog in detail as I thought you haven't been updating that regularly. Realised that I have missed a lot by not reading it on a regular basis.

Your posts on Srirangam, Thiruvanaikovil etc brought back lots of sweet memories of my days in that heavenly place. Coincidentally, the last 2 posts in my blog revolved around Srirangam. Though I have lived in Srirangam only for 3 years, I am emotionally attached with that place that many ppl think that Srgm is my native. In that context, your posts mean a lot to me. Very well done.

Karthik Rajagopal சொன்னது…

Hi Subha

nesamavae namburingla - amman nadu rathiriyil gummirutil ushnathodu kovil valam varuval endru? Our elders might have told such things to frighten thives and prevent criminal activities in the night. I dont know the exact reason, surely there must be some logic behind those statements. If you still want to test it, take a thermometer with blue tooth and keep it in temple. Presence of hight temperature will prove "artha raaathriyil ammman kovil suthi valam varum" myth.

My sincere apologies for those who have belief in that.... Awaiting interesting responses...

பெயரில்லா சொன்னது…

X-phile,

I've heard that sounds in the night and I've truly experienced that .. :( .. It's not a joke !

-Vasu

பெயரில்லா சொன்னது…

திருவானைக்காவல் ஜம்புநாதன் ஸ்வாமிநாதன்
**********************************
அற்புதம்! திருஆனைக்கா சிறப்பு பற்றிய கட்டுரை மிக்க நன்று.
Fyi. ஸமஸ்க்ருதத்தில் அஷக்த – Weak, அஷக்த: - Unable

திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்று இரண்டு பெயர்களும் வழக்கில் உள்ளன.

மேலும் அகிலாண்டேஸ்வரி அம்பாள், கன்னிகை. அதாவது, திருவானைக்கவலில் அம்பாள் பரமேஷ்வாரனிடத்தில் பக்தை வடிவில் இருக்கிறாள். பிரம்மோத்ஸவத்தில் திருக்கல்யாண உத்சவம் கிடையாது. தினமும் சாயரக்ஷை பூஜைக்கு பிறகு, அம்பாள் வெள்ளுடை மட்டுமே அணிகிறாள்.[அதுதான் தவத்திற்கான உடை].
மேலும் கோவிலின் கட்டமைப்பு, குறிப்பாக நீரோடை அமைப்பு [drainage system], மிகவும் நேர்த்தியானது. ஷிவ லிங்கம் 10 ஆண்டுகளுக்கு முன் வரை[திருவரங்கம், திருவானைக்கா பகுதிகளில், அடுக்கு மாடி குடியிருப்பு, மற்றும் ஆழ்துளை கிணறுகள் வரும் வரை] நிலத்தடி நீரின் நிலையில் இருந்தது. [The sanctum was so low that it was in the level of the water table.] முக்கிய நெடுஞ்சாலையிலிருந்து, கருவரை அடையும் வரை, சின்ன சின்ன படிகள் மற்றும் சறுக்குகளின் மூலம் கீழே இறங்கிக்கொண்டே செல்கிறோம்.
மழை காலத்தில் நீர்நிலை உயரும்பொழுது, கருவரைக்குள் நுழையும் நீரை வேளியே நந்தவனத்துக்கு பாய்ச்சி, அதிகப்படும் நீரை தெற்க்கு தெருவில் உள்ள ப்ரும்ம தீர்த்தம்கரை எனும் குளத்தில்[இப்பொழுது, அந்த குளத்தை ஆக்கிரமித்து, ஒரு எண்ணை ஆலை இயங்கிக் கொண்டிருப்பது வருத்தம்.] சேர்ப்பதற்க்கான கட்டமைப்பு மிக திட்டமிடப்பட்டு கட்ட்டப்பட்டுள்ளது. அதிலிருந்தே அதிகப்படும் நீரை காவிரியில் கலப்பதற்க்கும் கட்டமைப்பு உள்ளது. இங்கு, தேம்ஸ் நதிக்கரையில் உள்ள அமைப்புகளின் [உலகத்திலேயே அருமையான, நீரோடை அமைப்பக கருதப்படுவது] தரத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே கட்டப்பட்டது.ஆனால், இப்பொழுது தாங்கள் சென்று தேடினால், இதெல்லாம் அகப்படுமா என்பது சந்தேகம். அறியாமை முற்றிய நிலையில், ஆயிரமாயிரம் வருடங்களாக காக்கப்பட்டவை எல்லாம், நகர்புற வளர்ச்சியில் சிக்கு சீரழிக்கப் படுகின்றன.

திருவானைக்கவலில் ஐந்தாம் சுற்று, [விபூதி ப்ரகாரம்], சிவ பெருமான், அவர்களே முன் நின்று கட்டியதாகக் கருதப்படுகிறது. இறைவனை நினைத்து, பலன் எதிர் நோக்காமல் அந்த மதிலை கட்டிய திருப்பணியாளர்களுக்கு இறைவனார் திருப்பணிக்குழுத் தலைவராக உருமாறி, திருநீற்றை மட்டுமே கூலியாகக் கொடுத்தார். அவர்கள் அதை இன் முக்த்துடன் வாங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தல், அவை பொற்துகள்களாக மாறி இருந்த திருவிளையாடல், இங்கு பிரசித்தம்.
இவ்வளவு பிரசித்தி பெற்ற ஐந்தாம் பிரகாரத்தை வலம் வர, இந்த சித்திரை மாதத்தில், இந்தியா சென்ற போது சென்றேன். Ignorance, Neglect ஆகிய தலைப்பில் கவிதை எழுத வேண்டியவர்கள, அங்கு ஒரு புகைப்படம் எடுத்து வந்தால் போதும்.
முழுவதும் ஆக்கிரமிப்புகள், வாக்கு வங்கிகள் அனைவரும் அந்த மதிலை ஒரு சுவராக்கி வீடு அமைத்துள்ளனர். [குடிசைகள் மட்டும் என்று எண்ண வேண்டாம். அருமையான இரண்டு அடுக்கு மாடி வீடுகளும் அதில் அடங்கும்.]

கண்ணில் நீருடன் ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ என்று தேற்றிக்கொண்டு வருவதைத் தவிர வேறு ஒன்றும் அறியேன், பராபரனே.

Karthik Rajagopal சொன்னது…

Hi TJS Nathan

Kovilai patri neengal kodutha kripugal arumai. But where did get all these info from? Its true that our temples had sophisticated designs. When u describe abt this temple, I remember the Padmanaaba Swami temple in Tiruvananthapuram. The temple walls composed of jaggery paste and stones are stronger than the strongest of the concretes available today. The symetry of the gopuram is accurate to 0.5 degrees. We got to appreciate these engineering maravels. It should be made know to the world.

பெயரில்லா சொன்னது…

Subha,

nice post....expecting more and more such posts from you..btw, as me too from trichy, i should say that three of my cousins names are 'Akila'!!!!....How about the 'Chakkarapongal' ('Akkaaravadasal') prasadam of Thiruvanaikkovil ;))

jeevagv சொன்னது…

Just listed to the Akilandeswari song after this post:!
http://nadopasana.blogspot.com/2005/07/blog-post_04.html

TJ சொன்னது…

tjsnathan@yahoo.com
***********************
X-phile அவர்களே, தங்கள் கூற்று போல, கோவில்களில் பிரமிப்பூட்டும் கட்டடக்கலை நேர்த்தியுள்ளது.

மேலும் கோவில்கள் அமைத்ததில் முக்கிய சமூகப் – பொருளாதார[socio – economic reasons] நோக்கங்கள் அமைந்த்துள்ளன.

இவை பற்றி, நான் பரிமாறிக்கொண்ட மினஅஞ்சல்களை எனது பதிவில் பொதிக்க உள்ளேன்.

***********************

karma சொன்னது…

This is my first visit to your blog. Excellent..supera yezhudrengo...innum neiraya kovilgal pathi yezhudhungo..
cheers

sb சொன்னது…

Subha,
Romba azhagana katturai. naan ippo konjam kAlama, koil paththi ellam padichindu varen. adhilum mukkiyamaga, Saiva koilgal pattri.
Was wondering, neengalum andha madhiri edhavadhu padichu irukeengala? appadi padichu irundha I would want to get some cues from you.

sb சொன்னது…

tjsnathan,
excellent report!!! very informative. romba nandri ellarodayum share pannindadhukku.

பெயரில்லா சொன்னது…

முதல் முறையாக இங்கே வருகை புரிந்தேன். உங்கள் திண்ணையில் நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது இதமாக உள்ளது. உங்கள் இனிய பணி தொடருக.."

காவியங்களும் கற்பனைகளும்" அருமையான பதிவு. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கேட்டு வளர்ந்த மனம் நம் குழந்தைகள் ஹாரி பாட்டரையும் வௌவால் மனிதனையும் சிலந்தி மனிதனையும் மட்டும் படித்து வளர்வதைப் பார்க்கும்போது "நம்மிடத்தில் இல்லாதது என்ன அதில் உள்ளது" என்று கேட்கத் தோணுகிறது..

TJ சொன்னது…

I have put a blog relating to the socio-economics of temples, as told in a comment earlier here.

http://thenathans.blogspot.com/2005/07/socio-economics-of-building-temples.html

Online Incomes சொன்னது…

Hey I was just blog surfing amd I found your blog! Looks Great!

I also have a very cheap plane ticket
It deals mostly with very cheap plane ticket plus other stuff,
You can save up to 50% your next flight!

You should check it out if you get a chance!!

freestuff2 சொன்னது…

Hey I was just blog surfing amd I found your blog! Looks Great!

I also have a airport
It deals mostly with airport plus other stuff,
You can save up to 50% your next flight!

You should check it out if you get a chance!!

பெயரில்லா சொன்னது…

opt an illusionary tale

பெயரில்லா சொன்னது…

Wonderful and informative web site. I used information from that site its great. Men fucking shemales accept credit card adipex online concessionarie alfa romeo napoli usato Laptop case auto buy xenical uk American football league history 1993 grand am body kit ford focus fan page Br com domains Pentium iii 1200 mhz cpu http://www.cpubenchmarkcomparison.info/Videocardsforpc.html low blood pressure low salt symptoms Ivan lins love dance Island marketing site virgin web Free sex sites toon Patton pontiac Rhinoplasty price

பெயரில்லா சொன்னது…

Where did you find it? Interesting read » » »