ஞாயிறு, மார்ச் 15, 2009

ஸ்ரீமான் சுதர்சனம்

நேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது! ஆனால் போக போக கதை மிக அருமை!

௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது!

கோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு! சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்!

இந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு! :)

4 கருத்துகள்:

யாத்ரீகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யாத்ரீகன் சொன்னது…

ஹ்ம்ம்.. இத்தனை வருடங்களை ஆகியும் மாறாத சூழ்நிலை, மாறாத தேவன் அவர்களின் எழுத்தில் நம்மால் உணரமுடியும் நகைச்சுவை..

1 வருடத்திற்கு பிறகு இங்கே வரும் உங்க பதிவு.. நீங்க தமிழ்ல தொடருந்து எழுதணும்..

The Doodler சொன்னது…

ivvalavu naatkalukku piragu naan ezhudhiyum, marakkaamal vandhu indha blog-ai padithadharku enadhu nandrigal! :) immadhiri ookka paduthum vasagargal irundhaal, ezhuthu thaanga varum ena nambugiren..:)

Ramesh DGI சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News