பல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.
தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.
சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)
தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.
இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!
இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்
"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"
என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.
ஞாயிறு, அக்டோபர் 23, 2005
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 கருத்துகள்:
Our family had a very similar trip to Udippi, Dharmasthala and many places in Karnataka. Like you had mentioned , the dharshan , the food and the weather would be truly amazing.
The 4 things you mentioned from Bhagavat Gita are basic things that everyone should try to follow. Again, a very good post from you.
-Vasu
Well Written Subha
K
Well written, in a clear and lucid manner...
Subha - there are certain instances in ur posts which are so cutely written:
"இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா?"
"தயவு செய்து படித்துப் பாருங்கள்."
This one is from ur old post..
They are so cutely written :)
"மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)"
That means I should go to Dharmasala :P
"பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர்"
Very relevant to my latest post :)
I like your description of Dharma - this is what I have read about Dharma -
"What is Dharma?
In all worldly activities, you should be careful not to offend propriety, or the canons of good nature; you should not play false to the promptings of the Inner Voice, you should be prepared at all times to respect the appropriate dictates of conscience; you should watch your steps to see whether you are in some one else's way; you must be ever vigilant to discover the Truth, behind all this scintillating variety. This is the entire Duty of Man, your Dharma. The blazing fire of Jnana, which convinces you that all this is Brahman (Sarvam khalvidam Brahmam) will consume into ashes all traces of your egoism, and worldly attachment. You must become intoxicated with the nectar of Union with Brahmam; that is the ultimate goal of Dharma, and of Karma inspired by Dharma. "
Sathya Sai Baba
Dharma Vahini - Chapter I
"ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே"
That makes me wonder whether Dharma is bonded by Karma!
This is really awsome,,,,,,I m new to blogging.....I never knew people in US would also remember tamizh and write so well !!!!!!Although i'm a tamilian I jus cant speak such good tamizh... tht too being in india...... I will surely make it a point tht i read such things.......
HATS OFF to SUbha for her commendable piece of work....
சுபா, எழுத்து நடையில் பெரிய மாற்றம் தெரிகின்றது, முதிர்ந்த சிந்தனைகள் எளிய வார்த்தைகள் என்றே இருந்தது முந்தைய வலைப்பூக்கள்... இப்பொழுது கடின நடை :-)
இருந்தாலும் சுபா, சீதையை தீக்குளிக்க சொன்னது தர்மமென்பதை குறிப்பிட்டிருந்தது தவறாகவே படுகின்றது, இதுவே இன்றைய ஆண் செய்தால் Male Chav..?? கடவுள் என்ற குறியீட்டுக்குள் இருந்து செய்துவிட்டு பெரிய,புரியாத வார்த்தைகளால் விளக்க முற்பட்டால் தர்மமென்று ஆகிவிடுமா ??
பி.கு:
இலையுதிர்காலத்தில் Kentucky மிகவும் அழகாக இருக்கின்றது, Smokies-ஐ விட...
-
செந்தில் / Senthil
Not only dharmasthala, all the places in south canara district, like udipi, subrahmanya, sringeri, horanadu, kateel, mookambika all have nice choultries.
When i was working in mangalore, used to spend the weekends extensively touring these places.
Dharmasthala netravati is ferocious during chaturmasya, and is very pleasant in apr-may time.
Nice write up.!
Blog nalla iruku.. ithanai naal payana kurippaga irundha blog ippo konjam idealogyum serndhu varudhu.. probably due to the travel experience.
Thala cauvery pakkathula oru 5-10 kms la chinna oor/kovil irukkum.. anga dhan rendu rivers join pannum andha oor/kovil marandhu poyitten. Naa pona sila kovilgalileye romba manadhai thottadhu.. konjam kerala stylela vera irukkum. adhu enna yaarukavadhu nyabagam iruka?
Also vasu sonna madhiri dharmasthala, kukke subrahmanya, udupi, siva samudram ellam family odavm, lab mates odavum pona natkal migavum inimayanavai.
-vv
Pitaasi lokasya charaacharasya
Twamasya poojyashcha gururgareeyaan
Na twatsamo’styabhyadhikah kuto’nyo
Lokatraye’pyapratimaprabhaava
Tasmaatpranamya pranidhaaya kaayam
Prasaadaye twaamahameeshameedyam
Piteva putrasya sakheva sakhyuh
Priyah priyaayaarhasi deva sodhum
:-)
hmm well maintained tamil page. love to get into the bloggers of tamil.
pithatrum pithan
Hey Subha,
excellent post yet again!!
dharmam=honesty
idhil ellam uL adangara madiri ungalukku thonala?
that is my feeling.
தர்மத்தை பற்றி சரியாக சொன்னீர்கள் சுபா.. உங்கள் பதிவு நன்றாய் இருந்தது.
why dont your add your blog to
http://thamizmanam.com
it would be easy to keep track of your posts.
Thanks
கருத்துரையிடுக