புதன், ஆகஸ்ட் 10, 2005
மலைக்கோட்டை - 1 (ஒரு அறிமுகம்)
திருச்சியின் மிக பழமையான பகுதி மெயின்கார்டு கேட். அந்த காலத்தில், ராணி மங்கம்மா எழுப்பிய கோட்டை மதில் சுவரின் facade மட்டும் இன்னும் இருக்கிறது. திருச்சியின் பிரதான shopping area-வான மெயின்கார்டு கேட்டின் மத்தியில் மலைக்கோட்டை. இந்த தெப்பக்குளம் கோவிலின் மட்டும் தான் எப்போதுமே நிரம்ப தண்ணீருடன் நான் பார்த்திருக்கிரேன். திருச்சியின் கடுமையான வெய்யில் அந்தியில் தணியும் நேரம், தெப்பக்குளத்திலிருந்து வரும் மெல்லிய பூங்காற்று சந்தனம், ஊதுபத்தி மற்றும் பூக்களின் மணத்தையும் தன்னோடு அரவணைத்து வந்து சுகம் தரும்.
பெரிய கடை வீதியில் 'சாரத டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'கிருஷ்ணா கார்மெண்ட்ஸ்' என்று அலறும் இரு பெரிய shopping hubs நடுவில், மலைக்கோட்டையின் சிறிய வாயில். உள்ளே சென்றதும் மாணிக்க விநாயகரின் சந்நிதி. ஷாப்பிங் செய்ய வந்தவர்கள், பொழுது போகாமல் நேரத்தை கழிக்க வேண்டி உள்ளே நுழையும் வாலிபர்கள் என்று எப்போதும் கூட்டம் ததும்பும். மிக அழகான மாணிக்க விநாயகர் வெள்ளி கவசம் தரித்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். எப்போதும், எருக்கம்பூ மாலையும், அருகம்புல் அலங்காரமும் தரித்திருக்கும் விநாயகரை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பிரகாரத்தை சுற்றி, அவ்வையின் விநாயகர் அகவலும், திருப்புகழும் சுவற்றில் பொறித்திருக்கும். இப்போது புதுப்பித்தலில், அதையெல்லாம் மறைக்கும் விதமாக வண்ணம் பூசியிருப்பது சற்று வருத்தம். நம் கோவில்கள் கருங்கற்களால் ஆனாலும், மிக அழகாகவும், கலா ரசனையுடனும் படைக்கப் பட்டவை. அதை நவீன வண்ணங்களாலும், நமது 21-ஆம் நூற்றாண்டு சாயலில் புதுப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பிள்ளையாரை தாண்டி மலைக்கோட்டை செல்லும் படிகள் ஏறவேண்டும். செங்குத்தான படிகள். ஆனால், படி கற்களை மிக நேர்த்தியாக இழைத்திருப்பார்கள் அந்த கால சிற்பிகள்! சற்று தூரம் ஏறினாலே, சிறு ஜன்னல்கள் வழியாக பொன்னியில் புறப்படும் மாலை தென்றல் அள்ளிச் செல்லும். பல நாட்கள், நானும் என்னுடைய நண்பர்களும், அந்த ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்து பேசியதுண்டு. இயற்கையின் அழகிய air conditioning அது! மேலே செல்லும் வழியில், ஒரு இடத்தில் இரு பக்கத்திலும் இரண்டு பெரிய சிற்ப மண்டபங்கள் வரும். முற்றிலும் கல்லிலேயே குடையப்பட்ட மண்டபங்கள். Monolithic pillars என்று கூறப்படும் ஒரே கல்லாலேயே உருவாக்கப்பட்டவை. இந்த மண்டபங்களில், மகேந்திர வர்ம பல்லவர் சுவற்றில் சித்திரம் வரைந்ததாக கூறுகிறார்கள். நான் பார்த்ததில்லை. ஆனால், சுவற்றின் சித்திரங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் அழிந்து போயிருக்கின்றன. 'பார்த்திபன் கனவி' லும் இதை பற்றி ஒரு reference வரும்.
பொதுவாக விஷ்ணுவைத்தான் அழகு என்று போற்றுவார்கள். அவர்கள் அநேகமாக தாயுமானவரை பார்த்திருக்க மாட்டார்கள்!
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அண்¢ந்து
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!"
என்று என்னை மறந்து பாட வைத்த சுந்தரேசன் அந்த தாயுமானசுவாமி! 5 அடிக்கும் மேல் உயரமான லிங்கம். ஆடம்பரமே இல்லாத அலங்காரம் சிவனுக்கு. ஈர வேட்டியும், வில்வ இலையும்தான் usual அலங்காரம். பிரகாரங்களில் குளிர் காற்று வீச, சஞ்சலமான மனதுக்குக் கூட அமைதியூட்டும் சூழ்நிலை. பல நாட்கள் நான் அமைதியாக ஒரு பத்து நிமிடம் வாழ்க்கையின் அவசரத்தை விட்டு அமர்ந்துவிட்டு வருவேன்.
மலைக்கோட்டை தொடரும்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
27 கருத்துகள்:
Can't wait to hear about sugandha kunthaLAmbigai...
i wsa searching for mainguard gate & srirangam perriya gopuram in Google Earth and couldnt find it. if u were, can u send the coordinates?
Top to bottom, Malaikottai has about 491 steps.. Malaikottai pillayar is sort of a friend for me. Brilliant narration.. waiting for the next part.
subha super ma......i felt as though i was in uchipillayar kovil...even i was not impresses with the construction going on near manikavinayagar...
waiting for part 2...sekrum eluthu
kaushik
Hey, I liked ur tamil blog a lot..pretty informative and well maintained. Have read almost all ur posts.
BTW, I landed on ur blog from RS's
Nice narration,
Waiting for the other parts of this.
From 1992 to 2000, every weekend manicka vinayakar, mangala vinayakar, shree sugandakunthalamba sametha shree kalyana maathrubootheshwara darisanam pannra bagyam adiyenukku poorva jenma palan naala dhaan kidaichadhununu nambarein.
There is so much of stories, regarding to rockfort, that it needs a seperate blog in itself.! keep up the good work.
Hi Anon,
The mainguard gate teppakulam is clearly visible on southern bank of kaveri.
Please visit Chakra's post, to find Srirangam in Google earth.
Subha,
My house is just a block from rockfort temple..andha photola irukkara edathulendhu enga veetta paakkalaam!!...you kindled all my memories and thanks for that...expecting the next post...
Agnibarathi, anonymous,
Thanks for stopping by. Anonymous, I think someone has answered you.
Chakra,
hmm super stats. Idhellam engerndhu pidikkareenga? :)
Kaushik,
Yeah, I wish they'd do a better job of renovation.
rt,
thanks for stopping by, Keep coming.
Anand,
I did see your comment on my Srirangam post. I haven't set up my blogger account to send me e-mails when comments arrive. So I hadn't noticed it till recently. Sorry for not replying to it. None of your comments offended me!
Glad to see a fellow Srirangian(?!). Thanks for your concern and do keep visiting..:)
TJ,
yes there are so many stories..if you know of any, please do mail me.
Sundaresan,
Yes, one of my friends used to live in Andaar Theru. I could climb up to rockfort from his house..:) Those are sweet memories, indeed. sigh.
I haven't been there ! Your style of writing is too good. A very vivid description.Keep it up.
-Vasu
நான் இதுவரை... திருச்சியும் வந்ததில்லை.. மலைக்கோவிலையும் பார்த்ததில்லை.. கோவிலுக்குச்செல்லும் எண்ணமும் இருந்த்ததில்லை.. ம்ஹீம்... ஆனால்.. இந்த பதிவைப்பார்த்ததும்... மதுரையில் வீட்டின் அருகில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று.. பிரகாரத்தில் அமைதியாக உட்கார்ந்து விட்டு திரும்பும் கால நினைவுகளை கிளறிவிட்டது.. :-)
கட்டாயம் சென்று பார்க்க வேண்டும் என்றே தோணியது..
நல்ல வேளை.. மதுரைக்கோவிலில்.. ஓவியங்கள் பழங்கால.. முறையிலேயே மீண்டும் வரையப்பெற்றது...
>>கடுமையான வெய்யில் அந்தியில் தணியும் >>நேரம், தெப்பக்குளத்திலிருந்து வரும் >>மெல்லிய பூங்காற்று சந்தனம், ஊதுபத்தி >>மற்றும் பூக்களின் மணத்தையும் தன்னோடு >>அரவணைத்து வந்து சுகம் தரும்
>>சிறு ஜன்னல்கள் வழியாக பொன்னியில் >>புறப்படும் மாலை தென்றல் அள்ளிச் >>செல்லும். பல நாட்கள், நானும் >>என்னுடைய நண்பர்களும், அந்த >>ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்து >>பேசியதுண்டு.
>>பிரகாரங்களில் குளிர் காற்று வீச, >>சஞ்சலமான மனதுக்குக் கூட >>அமைதியூட்டும் சூழ்நிலை
மேலே உள்ள வரிகள் அனைத்தும்.. அங்கே சென்று வந்ததைப்போல் தோன்ற வைத்தது...
தொடர்வதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.....
Subha - neengal naan paatha penkalil oru athisaya piravi :) - valthukal - ith-thalaimurai penkal cinemavilum, veru sila anandathilum idu padum pothu - neengal ippadi iraivan sinthanai-odu irupathu - enaku mikavum achariyamagavum aananda-magavum irukirathu :)
Subha - mudinthal ithai padithu paarungal :)
http://naan-yaar.blogspot.com/2005/07/kandhar-anubhuthi-blissful-communion.html
தமிழ்நாட்டின் கோவில்களை இப்படி மிஸ் பண்ண வைக்கிறீர்களே..
'84-இல் திருச்சிக்கு சென்றிருந்தேன்.. கண்ணை மூடி மலைக்கோட்டையை நினைக்கும்போது நீங்கள் சொன்ன அந்த ஜன்னல்கள்தான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்.. என்ன அருமையான காட்சி அது.. படிகளை எண்ணியவாறு மேலே சென்றதும் நினைவிருக்கிறது..
சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படித்தபோது மீண்டும் சோழநாடு சென்று அந்த கோயில்களை எல்லாம் பார்க்கவேண்டும் போல உள்ளது..
Subha,
linga vadivaththila pAgu pattu idhu azagA theriyarAr nu en solreenga?
viLakkam thevai
yet again, nalla katturai!!!
நல்ல கட்டுரை. பள்ளி பருவத்தில் தமிழ்ப்பாட புத்தகத்தில் வரும் ஒரு lesson போல் இருந்து. (எங்கடா "அருஞ்சொற்பொருள்" காணமே என்று தேடிணேன்.)
சரி ... "பீட்டர் விடும் பெண்" என்று சொன்னது தப்புதான் அதற்காக இப்படியா ...
நான் உங்கள் எழுத்தில் variety எதிற்பார்க்கிறேன். சும்மா பக்தி matter மட்டுமே எழுதாதிங்க please.
Subha
excellent narration
tamizh and english renduthelyum kalakarel pongo :)
arjuna,
nothing special..just write whatever comes to mind..:)
gp,
I've been meaning to read Ponniyin Selvan again..One of the most amazing books I've read.
Vasu and Senthil,
thanks a lot.
SB,
Not sure I got you right? You're asking why I say this Linga is beautiful?! Assuming that's the question.
Hmm..I dunno. In some temples, the Lingam is bigger than other places. For example, in Thiruvanaikka, the lingam is supposed to be swayambu and it is really small and it is hard to discern the linga apart from the alangaaram. In some temples, the Linga is just imposing and stands out as in the case of Thayumaanavar. Gambeeramaagavum, azhagaagavum theriyum..adhanaala sonnen.
But God, in any form, is beautiful..just the perception differs.
tamil_virumbix,
appreciate your comment. Hmm..but I kinda started this blog wanting to write about places and temples i've been to..will try to write more generically in Tamil but right now, it is delegated to my English blog, I guess..:)
Subha,
Malaikottai naaan ponathe illai, aaanaal adivaaarathil irunthu garba graham varai ulla anaithu amsangalaiyum un pathil eluthi antha koil sendru vantha thripthiyai koduthaai. Nanri
In most of the temples Siva Perumaanai yen naam linga vadivil mattum valipadukirom. Does temples in north too do the same ?
first time i am seeing a tamil blog. Shows how new i am to the blog world. How do u get the tamil script here?
@Kay - Sivan is worshipped as lingam in most temples for different reasons. The lingam is a symbol for the formless, signifying the brahman. Also, it represents the male facet of the siva-sakthi idea. In a crude manner, the lingam is a phallus, but it actually signifies the idea of virility, the unmoving brahman which in its union with the vibrant sakthi creates the entire universe. In fact the lingam is a symbol of undivided union. The base of the lingam is called the yOni, a symbol of the female fertility or parAsakthi and the rising lingam is that of the male thereby depcting that moment when the universe is born out of the holy union. Also, the lingam represents a connection betweent he arUpA and rUpA forms of God. The lingam depicts no clear form of sivam and yet is a stone with a definite shape. There are much more meanings and interpretations that lie behind the lingam - you might want to check out Wikipedia or read a bit of Tirumantiram if you are really interested. You will find the lingam in North India as well - the famous amarnAth snow lingam is an example.
@Subha - Sorry for barging in such a rude fashion on your BLOG. Couldn't resist it!! And sIkkiram sugandha kunthaLAmbigaiyai paRRi ezhuthavum!!
Why not use a different Tamil font-the current one makes it difficult to read
Can not wait to read the second part! when is it coming? Do not make us wait long! You are writing well. You should also write abt panchavarna swamy koil of woraiyur.Keep writing
கருத்துரையிடுக