ப்ரியா "சிந்தனை சிதரல்" என்று அவருடைய வலைப்பதிவில் எழுதி வருகிறார். மனநோயாளிகள் பற்றியும், அவர்களை குணமாக்குதல் பற்றியும் மிக அழகான சில விஷயங்களை கூறியிருக்கிறார். ப்ரியாவின் சிந்தனைகள் சிதறி என் மனதில் சில எண்ணங்களை கிளப்பின...
என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.
ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.
என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?
"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"
என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....
வியாழன், டிசம்பர் 01, 2005
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
Hey Subha...I remember him very well.."he told his mother to bring coffee for me and he asked me how subha is doing" ..between how is he now?
between nice template I always hated that blue
K
"Anbe Sivam"
Nice of you. This post reminds me of my friend's sister. Sad but so true. Only when experiencing certain things in life , one thinks and realizes the need of love and affection. A good post that shows reality.
Btw, this template looks good.
-Vasu
உங்கள் பதிவை படித்தவுடன் என் நன்பரின் ஞாபகம் வந்தது. கேரளத்துக்காரரான அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார். ஒருநாள் அவர் வீட்டிற்கு சென்றபின் தான் தெரிந்தது அவருக்கு இரண்டு வயதில் மூளை வளர்ச்சி குன்றிய ஒரு மகன் இருப்பது. அந்த சிறுவனுக்கு எந்த புலனும் வேலை செய்யாது, அவரும் தன் பிள்ளைக்கு இப்படி ஏற்பட காரணம் அவன் பிரவசத்தை கையாண்டவிதம் தான் என்று கூறுவார். இத்தனைக்கும் பிள்ளை பிறந்தது என்னவோ அமேரிக்காவில் தான். அவர் தான் படும் கஷ்டத்தை சொல்லும் போதெல்லாம் எனக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பதே தெரியாது.
good post.
idhai kandippaaga prasavam parkkum anaithu nurse-galum padikka vendum.
oru nodi moolaikku iratham pogavittal vaazhlnal muzhludum andha kuzhlandaiyum petrorgalum padum vedhanai solli maladu ...
subha..
i am really moved by this post..
infact, innikku it made me think about it and helped me solve a confusion.. thanks di!
I am reminded of this
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
-திருகுறள்
மனத்தை கனக்கச்செய்ததுமட்டுமில்லாது நிறைய யோசிக்கவும் வைத்த பதிவு சுபா..
-
செந்தில்/Senthil
Naa ularara madhiri oru comment adikaren.
"ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?"
Indha Kelvikku badhil trivial illa. This is the reason why Forrest Gump movie is inspirational.
Bharathiyar kekkara madhiri
" Karpadhuvey, kaetpadhuvey, karudhuvathey
Neengalellaam arpa maayaygalo?
Ummul aazhntha porul illayo? "
Nalla padhivu...
-vv
very well written post. i really envy your thamizh:)
i came to know one such person.
he is a lecturer in chennai.
my friend's friend.
one day after many yrs we came to know that person had married someone who is more like mentally retarded.
aadi poitten ketta podhu.
bringing up such a child is a huge issue.
living with someone like that as his wife is something..
enakku therinchu avar yaar kiteyum idhai pathi sonnadhu illai.
there r heroes everywhere nu enakku unarthina sambavam idhu :)
கருத்துரையிடுக