திங்கள், மே 23, 2005

காவிரியும் கம்பனும் (திருவரங்கம்-3)

"கன்னியிழந்தனள், கங்கை திறம்பினள்
காவிரி நெறியிழந்தாள் என்றுரை கேட்கலாமோ
உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!
"
-கம்பன்

(Rough translation: Even the sacred, holy Ganga lost her sense of propriety and purity when she altered course and rushed headlong into her lover, Samudra Raja's arms. Lest the world might say that you lost your womanhood, O Kaveri! Please don't cross your banks.)

(இந்த பாடல், நான் இணையதளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால், என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! :))

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். என்னதான் இப்போது லிட்டர் கணக்கில் தான் காவிரியில் தண்ணீர் ஓடி கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் அப்படி வெள்ளம் வந்தது என்று நம்புவோமே..:) வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம்.

உலகத்திலேயே மிக புனிதமான நதியென்று கருதப்படும் கங்கை கூட, காதல் வயப்பட்டு, தன் காதலனான சமுத்திர ராஜனை கண்டவுடன் பாதை மாறி, கடமை மறந்து, கரை கடந்து, அவனோடு சென்று கலந்து விட்டாள். உலகம் போற்றும் காவிரியே! படி தாண்டாப் பத்தினியான ந,£ உன் பெண்மைக்கு இழக்கு நேரும்படியாக, இப்படி கரை கடக்கலாகாது!

என்று காவிரி கரையில் நின்று இந்த பாடலை பாடினானாம்.

கரைகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய துடித்துக் கொண்டிருந்த காவேரியானவள், இந்த பாடலுக்கு மயங்கி, அப்படியே சாந்த ஸ்வரூபியாக போய்விட்டாளாம்! இந்த பாடல்தான் கம்பனுக்கு "கவி சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கேள்வி.

இன்றும் கம்பன் நினைவாக, ரங்கநாயகி தாயார் சந்நிதிக்கு நேராக, கம்பன் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் இருக்கிறது. கிழக்கு வாசல், வெள்ளை கோபுரத்திற்கு மிக அருகாமை. சந்தியா வேளையில், மிக ரம்மியமான சூழலாக இருக்கும்! அரங்கனிடம் கூட்டதை அலைமோத விட்டு, தாமரை மலர்கள் வாசத்தின் நடுவில், பெண்களும், வயதானவர்களும் நிதானமாக மண்டபத்தில் அரட்டை அடிக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க ரங்கநாச்சியார் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று சிறுவர்களும், மனிதர்களும் casual-ஆக, அன்றாட வாழ்க்கை கதைகள் பேசும் அதே இடத்தில் தான், ஒரு காலத்தில் கம்பனுக்கு இறைவன் முதலடி எடுத்துக் கொடுக்க, அவன் ராமயணத்தை அரங்கேற்றினான்!

கம்பன் பாடலில் புகழ் பெற்ற பொன்னி திருச்சியில் தான் "அகண்ட" காவிரியாக காட்சியளிப்பாள். தஞ்சை, கும்பகோணம் (delta regions) போன்ற இடங்களில், தன் கணவனை (கடல்) சேறுவதற்காக, மணப்பெண்ணை போல், அடக்க ஒடுக்கமாக குறுகிவிடுவாள். திருச்சியில், இளம் பெண்ணை போல், குதூகலமாக நன்று அகன்று, பரந்து இருப்பாள். திருவரங்கம் வந்தவுடன், அரங்கனுக்கு மாலை இடுவது போல், இரண்டாக (காவிரி, கொள்ளிடம்) பிரிந்து ஸ்ரீரங்கத்தை அணைத்திருப்பாள். காவிரி ரங்கனை அணைப்பதால், திருமாலுக்கு அவளும் ஒரு மனைவியாவாள். நான் இப்படி dry-ஆகக் கூறுவதை தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாக ஒரு பாசுரத்தில் வர்ணித்திருப்பார்:


"பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"



காவிரி பற்றி எழுதும் போது, கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றிக் கூறாமல் இருக்க முடியவில்லை! என்னை மிகவும் கவர்ந்த சரித்திர கதை. காவிரிக்கு பொன்னி என்றின்னொரு பெயர் உண்டு. தமிழகத்தின் "rice bowl" என்று கருதப்படும் தஞ்சை மாவட்டத்தில் பாய்ந்து, செல்வமும் செழிப்பும் உண்டாக்குவதால், "பொன்னி" என்று அழைக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். அந்த காலத்தில் சோழ நாடு செழிப்புடன் இருந்ததற்கு முதற்காரணம்: காவிரி (நம்ம பல்லவ நாடு (சென்னை,காஞ்சி etc..), இப்போ எப்படி இருக்கோ, அப்பவும் அப்படி தான். தண்ணி கொஞ்சம் கம்மி தான்...LOL). சோழ நாட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவன் ராஜ ராஜ சோழன். இயற்பெயர் அருண்மொழி வர்மன் ஆயினும், காவிரியோடு identify பண்ணும் வகையில், அவனுக்கு பொன்னியின் செல்வன் என்றே கல்கி சூட்டிவிட்டார்! பொன்னியின் செல்வனில் வருவது போல், இன்று கூட, ஆடிப் பெருக்கு (பெருக்கு இருக்கிறதோ இல்லையோ!) திருச்சியில் மிக விமரிசையாக நடைபெறும்!

இந்த அழகான காவிரி, மிக ஆழமானவள் கூட! அம்மா மண்டப படித்துரையில், ஏகப்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். கம்பிகளை தாண்டி, நீந்த சென்று, புதை மணலில் மாட்டி கொள்வார்கள். காவிரியின் புதைமணல் மிக treacherous. பிடித்தால் உடனே மரணம் தான்! அரசாங்கமும், தேவஸ்தானமும் பல precautions எடுத்தும், இன்றும் பல பேர் மடிகிறார்கள். வருத்த பட வேண்டிய விஷயம்.

10 கருத்துகள்:

Kay சொன்னது…

Hey Subhashini

Sollave illa unnoda tamil blog eluthurenu....Ivulo sooper'aaa eluthitu marachittiye...

Arumaiya eluthi iruke...eluthikitte iru

பெயரில்லா சொன்னது…

Absolutely beautiful writing. Enjoyed to the core :)

~Vasu

The Doodler சொன்னது…

Kay, vasu, virumandi..thanks!:)

dinesh சொன்னது…

Arumai ! Expecting more...Kalakkare Subha !

Dinesh

RS சொன்னது…

Thought you might be interested in this post...

The Doodler சொன்னது…

Hey RS,
thanks! That is a good blog..

Unknown சொன்னது…

Hi.. I am new here. Me also penning a blog about our Arangan. There is a classic explanation of Thiruppavai that it was sung by Aandal on our Arangan. Keeping in tradition that wifes don't tell their husband's name, Aandal has not mentioned Ranganathar in any of the 30 verses. When i was in my school, one there was a big homam by some andhra people in amma mandapam where they recited ஆழி மழைக்கண்ணா!. Seems they do it once 12 years to get good rain. May be that would help our cavery get back to old days.

sb சொன்னது…

Subha,
you are doing a great job here!! How I wish I was from a place like this. At least blog ezhudhavadhu udhavi irukkum :-) onnuthukkum ubayogam illadha Chennai mAnagarai sendhavan. very worshttu.
btw, when I was going through your comparisons about "aganda kAveri" and the delta region, ennamo oru hAsyamana oru eNNam. kalyana paruvam varuvadharkku mun pengal agandu thirandu irupArgal polum, nu solra madiri irundhuthu. hey just kidding ok.

The Doodler சொன்னது…

SB,
LOL. True, romba bad comparison on my part...:)) Didn't realize it. I guess what I meant was girls might be really more bubbly and enthusiastic before marriage...not that that is any reflection on marriage or the male gender...:)

PVS சொன்னது…

hey Subha,

Wonderful writing. Enjoyed every bit of it. Went thro all your entries.